அனைத்தின்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் செயல் முன்னேற்றப் போக்கை பாருங்கள். மன்றத்தின் தலைவர் திரு எஸ் செல்வம் மின்னஞல் மூலம் தி கலையரசிக்கு தெரிவித்த தகவல் இதோ. படியுங்கள் நாங்கள் 5 நேயர்கள் இணைந்து கூட்டாகத் துவக்கியிருக்கும் CRI Listeners SMS net என்ற செல்லிடைத் தொலைபேசி அமைப்பு பற்றி ஏற்கனவே உங்களுக்கு நான் தெரிவித்துள்ளேன். இவ்வமைப்பு நாள்தோறும் வானொலிச் செய்திகளை செல்லிடைத் தொலைபேசி மூலம் அனுப்பி வருகிறது. ஒவ்வொரு நாளும் சில நேயர்கள் இதில் சேர்ந்தவாறு உள்ளனர். இந்த நிலையில், மேலும் ஒரு புதிய முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். நேற்று முதல் சீன வானொலி நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு, நாள் ஒரு கேள்வி கேட்கத் துவங்கியுள்ளோம். தினமும் கேட்கப்படும் கேள்விகளுக்கு அடுத்த நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் இரவு 7.30 மணிக்கு முன் நேயர்கள் தொலைபேசி மூலம் விடைகளைத் தெரிவிக்க வேண்டும். ஒரு திங்கள் காலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு யார் அதிக எண்ணிக்கையில் சரியான விடைகளை அளிக்கிறார்களோ அவர்களுக்கு பரிசளிக்கப்படும். முதல் பரிசாக ரூ.200 இரண்டாம் பரிசாக ரூ.100 மதிப்புள்ள செல்லிடைத் தொலைபேசி அட்டை அல்லது அஞ்சல் தலைகள் வழங்கப்படும். திங்களுக்கு மொத்தம் ரூ.300 செலவாகும். நாங்கள் 5 பேரும் தலா ஆளுக்கு ரூ.60 செலவிடுவோம். சீன வானொலியில் திங்கள் வினாவிடைப் போட்டி தற்போது இல்லாத குறையை இப்போட்டி ஓரளவு தீர்த்து வைக்கலாம். செல்லிடைத் தொலைபேசிப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருமĮ! 1; நிலையில், அதைப் பயன்படுத்தி பலருக்கும் சீன வானொலியை அறிமுகம் செய்து வைக்கவும், தினந்தோறும் நேயர்களை நிகழ்ச்சிகளை முழுமையாகக் கேட்க வைக்கவும் ஒரு முயற்சி இது. நேற்று முதல் கேள்விகளை அறிவிக்கத் துவங்கிவிட்டோம்.
கேள்விகளை மட்டும் நான் தயார் செய்வேன். பல நேயர்களுக்கும் இப்போட்டி பற்றி தெரிவிக்கும் வகையில் 16.3.2005 கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் இதுபற்றிய அறிவிப்பை பின்வருமாறு வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 'நமது நேயர்களால் நடத்தப்படும் 'சீன வானொலி நேயர்கள் செல்லிடைத்தொலைபேசி செய்திக் குழு' நேயர்களுக்கு போட்டி ஒன்றினை மார்ச் திங்கள் 13ஆம் நாள் முதல் துவக்கியுள்ளது. நமது நிகழ்ச்சிகளின் அடிப்படையில் நாள்தோறும் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் ஒரு கேள்வி கேட்கப்படும். கேள்விக்கான சரியான விடையை செல்லிடைப் பேசியில் SMS மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ குழுவிற்கு மறுநாள் இரவு 7.30 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். சரியான விடைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் பரிசாக ரூ.200, இரண்டாம் பரிசாக ரூ.100 மதிப்புள்ள செல்லிடைத் தொலைபேசி அட்டை அல்லது அஞ்சல்தலைகள் நேயர்களுக்கு வழங்கப்படும். போட்டியின் முடிவு ஒவ்வொரு திங்களின் முதலாம் நாள், குழு வாயிலாக அறிவிக்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் நேயர்களும், இக்குழுவில் உறுப்பினர்களாக சேர விரும்பும் நேயர்களும் பின்வரும் நேயர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
For more details...
வளவனூர் புதுப்பாளையம் S.செல்வம் .. 9842038770, பெருந்துறை பல்லவி K.பரமசிவன் .. 9842976475 , பாண்டிச்சேரி N.பாலக்குமார் .. 9842313233, பாண்டிச்சேரி G.இராஜகோபால் .. 9843779442, கோயம்புத்தூர் K.இராதாகிருஷ்ணன் .. 9842661291 [OR]