Wednesday, July 06, 2005

அலைவரிசை மூலம் பரவிய நட்பு


---------------------------------------------------------------------


நவ சீனா நிறுவப்பட்டதன் 55வது ஆண்டு நிறைவு பற்றிய பொது அறிவு போட்டிக்கான பரிசளிப்பு விழா மே திங்கள் 18ம் நாள் பெய்ஜி மக்கள் மகாமண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. சீன வானொலி இயக்குநர் வான் கண் நியனின் தலைமையில் இந்த பரிசளிப்பு விழா நடைபெற்றது. சீன வானொலி நிலையம் 2004ம் ஆண்டில் நடத்திய இந்த போட்டியில் உலகின் 161 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 5 லட்சம் சீன வானொலி நேயர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தலைசிறந்த பங்கு ஆற்றியதற்காக 11 நேயர்களை சிறப்பு பரிசு பெற்ற நேயர்களாக தேர்ந்தெடுத்துள்ளோம். இது பற்றி சீன வானொலி இயக்குனர் வான் கன் நியன் தொகுத்து கூறியதாவது அறிவு போட்டியில் கலந்து கொண்ட நேயர்கள் சீனாவின் வளர்ச்சி பற்றியும் சீன மக்கள் பற்றியும் நன்றாக தெரிந்து கொண்ட அளவு நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகும். இத்தகைய போட்டி எதிர்காலத்தில் நாங்கள் தொடர்நது மேற்கொள்வோம். நேயர்களிடமிருந்து நல்ல யோசனை வாங்குவது எங்களுக்கு தேவை. வானொலி ஒலிபரப்பு தரத்தை உயர்க்கும் வகையில் பாரம்பரிய வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது தவிர கடந்த ஆண்டில் வெளிநாடுகளில் ஒலிபரப்பு நேரத்தை வாடகைக்கு எடுத்து வாங்கி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பினோம். இனிமேல் இந்த முயற்சி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். என்றார் அவர்.

வானொலி நிகழ்ச்சி தவிர இணைய தொடரமைப்பு வளர்ப்பதில் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். சென்ற ஆண்டில் நமது வானொலி ஈடுபட்டுள்ள இணைய தொடரமப்பை சர்வதேச வானொலி இணைய தொடரமைப்பில் முதலாவது இடம் வகித்துள்ளது. எங்கள் இணைய தொரமைப்பில் பங்கெடுத்து நிகழ்ச்சிகளை படிக்கும் நேயர்களின் எண்ணிக்கை பி பி சி இணைய தொடரமைப்பை விட அதிகமாக உள்ளது. எதிர்காலத்தில் எழுத்து மட்டமல்ல குரலுடன் கூடிய இணைய தொடரமைப்பை விரிவாக்க வேண்டும். நீங்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டு நேயர்களுக்கு சீனாவை அறிந்து கொள்ளும் வாய்ப்பை அதிகமாக வழங்குவதற்காக முயற்சி மேற்கொள்வோம் என்று இயக்குனர் வான் கண் நியன் பரிசளிப்பு விழாவில் குறிப்பிட்டார்.சீன தேசிய மக்கள் வேரவையின் துணை தலைவர் சியு சியான் லு மகிழ்ச்சியுடன் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார். உரை துவக்கும் போது மகிழ்ச்சியை அவர் தெரிவித்தார்.

வானொலி மூலம் சீன மக்களுக்கும் உலக மக்களுக்குமிடையிலான நட்பை நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இணைக்கும் கடமையை இங்கே உட்கார்ந்து என்னுடன் இணைந்து பகிர்ந்து கொண்ட நீங்கள் தான் நிறைவேற்றியுள்ளீர்கள். சிறப்பு பரிசு பெற்ற நேயர்களை அவர் புகழ்ந்து பாராட்டினார். அவர் கூறியதாவது பரிசு பெற இங்கே வந்த நீங்கள் கடந்த பல ஆண்டுகளாக சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு மகிழும் தலைசிறந்த நேயர்களாக திகழ்கின்றீர்கள்.சீனாவை அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொண்ட பிறகு சீனாவை நேசிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் பல ஆண்டுகளாக சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்வதற்கான முக்கிய காரணமாகும். இந்த எழுச்சி இன்றைய உலகத்தில் மனிதர்குலம் கொண்டுள்ள மிக சிறந்த அருமையான எழுச்சியாகும் என்றார் சியு சியா லு. அவர் மேலும் கூறியதாவது உங்களை போல சீன வானொலிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். சீன வானொலி பணியாளர்களின் அயராது உழைப்பதன் மூலம் மின்னலையால் எங்களையும் உங்களையும் நெருக்கமாக இணைத்துள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமான நேயர்களிடமிருந்து உங்களை சிறப்பு பரிசு பெற்ற நேயர்களாக தேர்ந்தெடுப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். அதேவேளையில் நீங்கள் 5 லட்சத்துக்கும் அதிகமான நேயர்களுக்காக கண் கூடாக உண்மையான சீனாவை பாருங்கள். தங்கள் காதுகளுடன் சீன மக்களின் உண்மையான குரலை கேளுங்கள். சில இடங்களில் சீன கட்டிடங்களையும் பொருட்களையும் தொட்டுப்பாருங்கள். பொதுவாக கூறிந் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய நூற்றாண்டிலுள்ள சீனா பற்றி மேலும் கூடுதலாக அறிந்து கொள்ளுங்கள் என்று துணை தலைவர் சியு சியா லு தமது உரையில் விருப்பம் தெரிவித்தார். மக்கள் மகா மண்டபத்தில் 34 மாநிலங்கள் தன்னாட்சிப் பிரதேசங்கள் மத்திய அரசின் தலைமையின் கீழுள்ள மாநகரங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் மண்டபங்கள் உள்ளன. பரிசளிப்பு விழா நிறைவடைந்த பின் நேயர்களும் மொழிபெயர்பாளர்களும் முன்னேறிய தொழில் நுட்பத்தை பிரதிபலிக்கும் ஷாங்காய் மண்டபத்தையும், இதர மூன்று மண்டபகங்களையும் பார்வையிட்டனர். தேசிய இனங்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் தைக்கப்பட்ட கைவினை ஓவியத்தின் முன்னால் நேயர்கள் நிழற்படங்களை எடுத்தனர்.

இரவில் பெய்ஜிங்கில் ஆயிரத்து நூற்றுக்கும் அதிகமான ஆண்டு வரலாறுடைய பெய்ஜிங் வாத்து கறி உணவு விடுதியில் சீன வானொலி துணை இயக்குநர் சன் மின் யி சிறப்பு பரிசு பெற்ற நேயர்களைச் சிறப்பித்து விருந்து அளித்தார். சுவையான வாத்துக் கறி வகைகள் நேயர்களுக்கு ஆழந்தமானப் பதிவை ஏற்படுத்தியுள்ளன. விருந்தின் இடைவெளியில் நமதுநேயர் திருச்சி அண்ணா நகர் வி தி ரவிச்சந்திரன் அவருடைய 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதிய கடித தொகுதியை காண்பித்தார். 76 மீட்டர் நீளமான கடித தொகுதியை கண்டு சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் சன் புகழ்ந்து பாராட்டினார். அத்துடன் இந்த கடித தொகுதியை நன்றாக பாதுகாக்க வேண்டும். நன்றாக நமது நேயர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.