தலைப்பிலேயே ஒரு கிலி ஏற்படுத்துவது, இன்றைய ஊடங்களுக்கு ஒரு வகையில் அகோரப்பசியை தீர்ப்பதாக அமைகிறது. ஐந்து மாநிலங்களில் உள்ள அகில இந்திய வானொலியின் பயிற்சி மையமும், யாருமே கேட்காத மூன்று தேசிய ஒலிபரப்பு நிலையங்கள்(1215 kHz New Delhi 20 kW, 1566 kHz Nagpur 1000 kW, 9380 kHz Aligarh 250 kW) மட்டுமே நிறுத்தப்படுகிறது. அதுவும் இரவு 6.50 முதல் காலை 6.10 வரை ஒலிபரப்பு செய்பவை அவை) ஆனால், கடந்த இரண்டு நாட்களாக வரும் செய்திகள் என்னவோ, ஐந்து மாநிலத்தில் உள்ள அகில இந்திய வானொலி நிலையமே மூடப்படுவது போன்ற ஒரு தவறான தகவல் தொடர்ந்து பல்வேறு ஊடங்களால் பகிரப்பட்டு வருகிறது. செய்திக்குறிப்பை சரியாக புரிந்து, சரியான மொழிபெயர்ப்பை செய்தால் மட்டுமே இது போன்ற 'கிலி' செய்திகளை தவிர்க்க முடியும்! ஆனால், நோக்கமே கிலியாக இருந்தால், ஒன்றும் செய்ய முடியாது!
இணைப்பு:
1.அகில இந்திய வானொலியின் செய்திக்குறிப்பு.
2. தவறான செய்தி வெளியிட்ட ஊடங்கள்
(இன்னும் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன)
5 மாநிலத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்! - செலவைக் குறைக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை | All India Radio shuts down in 5 states
|