Saturday, July 06, 2019

சென்னை அகில இந்திய வானொலி பகுதி நேர அறிவிப்பாளர் தேவை / All India Radio Chennai needs casual announcers!


Inline image

சென்னை அகில இந்திய வானொலி பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு ஆட்களை தெரிவு செய்கிறது.

All India Radio Chennai needs a casual announcers! Click the following link and download the application!


Thursday, June 27, 2019

ஒரு அஞ்சல் அட்டை எழுதுங்கள், பரிசினை அள்ளுங்கள் / Euromaxx Contest


Inline image

அஞ்சல் அட்டை எழுதும் பழக்கம் முற்றிலும் அழிந்துவரும் சுழ்நிலையில், அதை ஒட்டிய ஒரு போட்டியை ஜெர்மன் வானொலி நேயர்களுக்கு வைத்துள்ளது. அஞ்சல் அட்டையை எழுதி ஒரு பயணத்திற்கு தேவையான பரிசுப் பொதியை அள்ளுங்கள்!


*Euromaxx - Send us a postcard!* ✍💌


Sadly, the tradition of writing postcards has become almost extinct. But 150 years ago, the postcard was the latest and most modern means of correspondence. What we now call a postcard is actually a picture postcard. 📫


We look forward to receiving your postcards! Send us one, gladly with a motive from your hometown and a small greeting. Our adress is:


Deutsche Welle

Euromaxx

Voltastr. 6

13355 Berlin

Germany


To enter our draw please also write your address on the postcard. As a thank-you we are giving away a DW travel set. 🎁


*The closing date for entries is 01 September 2019, 12 noon UTC. Our decision is final.*


Kind regards

Your DW Service Team


#DW #EUROMAXX #RADIO #DX

Wednesday, May 22, 2019

நாளும் ஒரு நல்ல வானொலி தகவல் / DX Program from AIR TUTICORIN

On the occasion of 25th anniversary of AIR Tuticorin, a special 15 days dx program is going on air at 8.30-8.32 am on 1053 kHz. A special e-QSL card will be issued for this program. Those who are want to get the qsl, send a report to ardicdxclub@yahoo.co.in

தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தின் வெள்ளி விழாவினை ஒட்டி சிறப்பு "நாளும் ஒரு நல்ல வானொலி தகவல்" நிகழ்ச்சி தினமும் காலை 8.30-8.32 வரை 'முத்துகுவியல்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு e-QSL Card அனுப்பப்படவுள்ளது. நிகழ்ச்சியை மத்திய அலை 1053 kHz ல் கேட்கலாம். 

#AIR #TUTICORIN #DX #E-QSL

Inline image


Wednesday, May 01, 2019

Visit the Kajang tx site Malasiya / கஜாங் சிற்றலை ஒலிபரப்பி தளம்

In my recent International Radio tour, I have a chance to visit the Kajang tx site, (KAJ MLA 03N01 101E46) which is located 26 km away from Kuala Lumpur, Malasiya. This site started on 1964. Purpose of this site is broadcast both international and national radio of Radio Television Malasiya (RTM). Right now it is broadcast only the local FM relays. They are using 5965 (100 kw), 6050 (50 kw), 7295 (100 kw), 9835 (100 kw) and 11665 (100 kw). They got permission from ITU to broadcast on 54; 55; 58; 59; 60 CIRAF-Zones. Radio-Television Malaysia got three 100 kilowatt DRM-ready HF transmitters from Continental along with other associated equipment that were installed in Kajang. Earlier it were used 11885 and 6175 kHz for DRM.

வானொலி பயணங்களில் மிக முக்கியமானது, அந்த அந்த வானொலி நிலையங்களின் ஒலிபரப்பி அமைந்துள்ள இடங்களுக்கு செல்வது. சர்வதேச வானொலிகளின் பயண வரிசையில் சீனா, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரை அடுத்து சமீபத்தில் சென்ற மற்றும் ஒரு இடம் மலேசியா. 1980களில் 'வானொலி 6' என்ற பெயரில் தமிழில் ஒலித்த இந்த மலேசிய வானொலி, சிற்றலையிலும் தமிழக நேயர்களை இந்த ஒலிப்ரப்பி தளத்தில் இருந்துதான் வந்தடைந்தது. இப்பொழுது 'மின்னல் எப்.எம்' என்ற பெயரில் பண்பலையில் மட்டுமே ஒலித்து வருகிறது. தலைநகர் மலேசியாவில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது இந்த கஜாங் சிற்றலை ஒலிபரப்பி தளம். சமீப காலமாக உள்ளூர் பண்பலை நிகழ்ச்சிகளை மட்டுமே சிற்றலையில் அஞ்சல் செய்கிறது. டி.ஆர்.எம் ஒலிபரப்பியையும் இந்த நிலையம் கொண்டுள்ளது இதன் மற்றும் ஒரு சிறப்பு. (நன்றி: Pon Kogilam)Inline image

Inline image

Inline image

Saturday, April 13, 2019

DBS 2019

Dear DX-friends,

NEW Domestic Broadcasting Survey available !

A completely updated DBS-21 with 15 pages is now available on www.dswci.org , click Domestic Broadcasting Survey - Latest Issue.

Any DX-er may download it FREE OF CHARGE and use it when DX-ing.

You are welcome to forward this to your readers.
Best 73,

Anker Petersen
(Via Alokesh Gupta)

Saturday, March 16, 2019

371 Private FM stations operating in India

இன்றைய கணக்கின் படி இந்தியாவில் மொத்தம் 371 தனியார் பண்பலை வானொலிகள் ஒலிபரப்பி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 30 வானொலிகள் செயல்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் எட்டு வானொலிகள் ஒலிபரப்பி வருகிறது.

Detailed list of 371 Private FM stations operating in India as on 12 Mar 2019 is now available in the website site of Ministry of Information & Broadcasting, Govt. of India as follows:

Via Jose Jacob, VU2JOS

Wednesday, March 06, 2019

அம்மா சமுதாய வானொலி

சென்னையில் அம்மா சமுதாய வானொலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா சமுதாய வானொலி மூலம் முதல்வர் ஒரு கோடி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் உரையாட இயலும். இந்தியாவிலேயே முதன்முறையாக கைபேசி மூலம் நவீன தொழில்நுட்பத்தில் அம்மா சமுதாய வானொலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமுதாய வானொலியில் தினந்தோறும் ஒரு கோடி மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுடன் முதல்வர் பேச முடியும்.மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் அரசின் செய்திகள் சென்றடைய சமுதாய வானொலி உதவும். (நன்றி: தினகரன்)


Monday, March 04, 2019

பிபிசி திரு.விமல் சொக்கநாதன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில்

பிபிசி தமிழோசையில் பணியாற்றிய திரு.விமல் சொக்கநாதன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் 5 மார்ச் 2019 அன்று மதியம் 2.00 மணிக்கு உரையாற்றவுள்ளார்கள். அனைவரும் வருக.



Inline image


Wednesday, February 27, 2019

ரேடியோ தைவான் இண்டர்நேசனிலில் வேலை வாய்ப்பு / Radio Taiwan International

தைவானின் பொதுத்துறை வானொலியான ரேடியோ தைவான் இண்டர்நேசனிலில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பு!

Radio Taiwan International
(RTI's) English Service has an opening for a contract-based news and social media editor. Responsibilities include: writing, copy-editing, broadcasting, and maintaining web page and social media presence.

Applicants must:
-- have graduated from university
-- have a good speaking voice
-- be fluent in spoken and written English
-- have knowledge of Taiwan news
-- have experience editing news and managing social media presence

Proficiency in Mandarin Chinese and video editing experience are a plus.

Those interested should download an application form (below) and send it to RTI-English1080122@rti.org.tw by Feb. 25, 2019. Written and mic. tests will be administered for this position from 9 a.m. until 12 p.m. on Mar. 15, 2019.


Address: RTI Personnel Department, No. 55, Bei-An Road, Taipei, Taiwan

Tel: (02) 2885-6168 #516

(Applicants must provide a phone number; qualified applicants will be notified before the test date. Resumes will not be returned.) [Via Alokesh Gupta IDXCI FB]

Sunday, February 24, 2019

சிற்றலை ஒலிபரப்பி தளம் நிறுத்தம் / Meyerton RSA Tx site closed

Bye bye Meyerton RSA! It is confirmed that Sentech of South Africa is ending SW broadcast from 31 March 2019. So Channel Africa (Old Radio RSA), BBC, AWR. Deutche Welle S.Africa Radio League etc.broadcasting via  Meyerton will be only in memory shortly. (Info via Jeff White, AWR Wavescan of 24 Feb 2019 via Jose Jacob)


தென்னாப்பிரிக்காவில் மேயர்டன் பகுதியில் அமைந்துள்ள செண்டெக் எனும் சிற்றலை ஒலிபரப்பி தளம் வரும் 31 மார்ச் 2019டன் தனது சிற்றலை சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக அந்த ஒலிபரப்பு தளத்தினை பயன்படுத்திவந்த சேனல் ஆப்ரிக்கா, பிபிசி, ஏடபிள்யூஆர், ஜெர்மன் வானொலி மற்றும் தென் ஆப்பிரிக்க ரேடியோ லீக் ஆகியவை இனி நம் நினைவுகளில் மட்டுமே இருக்கும்.


#MEYERTON #Tx #BBC #AWR


Inline image


Saturday, February 23, 2019

Call for paper for RVA / பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி புத்தகத்திற்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது

Research Articles in Tamil are invited for "Multiple Perspectives of Radio Veritas Asia" book. Last date: 10 March 2019. Further details available in the exclusive Whatsup group.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கடந்த 50 வருடங்களாக ஒலிபரப்பி வருகிறது வேரித்தாஸ் வானொலி. தமிழ் ஒலிபரப்பு 1975-ல் தொடங்கப்பட்டு, இன்றும் தொடர்கிறது. (http://www.rveritas-asia.org/index.php/tamil-overview)
பன்முகப் பார்வையில் வரிசையில் நான்காவது புத்தகமான "பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி" புத்தகத்தின் பணிகளுக்காக இந்த வாட்ஸப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இனிய இதயங்களை, ஆய்வுக் கட்டுரைகள் அனுப்ப அன்புடன் வரவேற்கிறோம். கட்டுரை அனுப்ப கடைசி நாள் 10 மார்ச் 2019.

Tuesday, February 12, 2019

Special World Radio Day QSL from AIR

Special program on World Radio Day 2019 - Radio Bridge will be Live from AIR Chennai, Tiruchi, Coimbatore, Madurai, Pondicherry and Tirunelveli at 10.00 to 11.00 am. Special e-QSL will be issued by Ardic DX Club. By the way I will also participate in that program from AIR Chennai! Don't missed it. Send your reports to ardicdxclub at yahoo dot co dot in.
For hard copy qsl, send the return postage. Hardcopy reports will be get a special bookmarks, wrd stickers and certificates! For more details ping me in inbox!

உலக வானொலி தினத்தினை ஒட்டி அகில இந்திய வானொலி இன்று காலை 10.00 முதல் 11.00 வரை சிறப்பு 'வானொலிப் பாலம்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் சென்னை நிலையத்தில் இருந்து நான் கலந்துகொள்கிறேன். இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆர்டிக் சர்வதேச வானொலி நேயர்கள் மன்றம் சிறப்பு வண்ண அட்டை, ஸ்டிக்கர், புக் மார்க்கை வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சியை கேட்டுவிட்டு மின் அஞ்சல் (ardicdxclub at yahoo dot co dot in)அனுப்புபவர்களுக்கு சிறப்பு e-qslலை அனுப்ப உள்ளது.

#WorldRadioDay #WRD #உலகவானொலிதினம் #வானொலி

Inline image


Friday, January 25, 2019

உலக வானொலி தினம்

உலக வானொலி தினத்தினைக் கொண்டாட தயாராகுங்கள். வரும் 13 பிப்ரவரி 2019, புதன் கிழமை காலை 11 மணிக்கு!

World Radio Day
13-2-2019, 11 am.
DJC studios 
Dept of Journalism and Communication 
University Of Madras

#WRD #WorldRadioDay #வானொலி


Inline image

Inline image


Tuesday, January 22, 2019

ரேடியோ கார்டனும் இஸ்ரோவும் / Radio Garden was designed by Jonathan Puckey not by ISRO

Radio Garden பற்றி தொடர்ந்து பறப்படும் பொய்ச்செய்தி குறித்து இந்த பதிவு. இது தவறான செய்தி. இஸ்ரோவுக்கும் இந்த புராஜெட்டுக்கும் துளியும் தொடர்பில்லை. எப்படி படித்த நாமும் இதை cross check செய்யாமல், அப்படியே forward செய்கிறோம் என ஆச்சர்யமாக உள்ளது. இது ஒரு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சியில் உருவான மகத்தான புராஜெக்ட், குறிப்பாக  Netherlands Institute for Sound and Vision. மேலதிக விபரங்கள் இணையத்திலேயே கிடைக்கிறது. இனி மேல் இது போன்ற பொய் செய்தி வந்தால், அந்த தகவலை அனுப்பியவருக்கே , அதனை திருப்பி அனுப்பி, பொய் செய்தி பரவுவதை தடுக்கவும். துறை சார்ந்த நாமே இது போன்ற தகவல்களை அனுப்பினால், அது இன்னும் வேகமாக பரவும். 
https://www.quora.com/Is-Radio-Garden-connected-to-ISRO's-104-satellites

It's basically an awesome real-time adventure to hear voices and music from around the planet. Radio Garden was designed by Jonathan Puckey in collaboration with the Netherlands Institute for Sound and Vision. You may listen the Jonathan Puckeys Interview in the following link.
https://www.npr.org/2016/12/18/506045527/jonathan-puckey-s-radio-garden-knows-no-borders

Sunday, January 20, 2019

வானொலி பிறந்த ஊர் / Birth city of Radio

பிபிசி தமிழோசையின் முன்னால் ஆசிரியர் திரு.மணிவண்ணன் அவர்களின் முக நூலில் இருந்து!
————

வானொலி பிறந்த நகர்... 

வேலை விஷயமாக லண்டன் அருகே இருக்கும் செம்ஸ்ஃபோர்ட் நகருக்கு போக நேர்ந்தது. 

சிறிய நகரம்தான். அதற்கு இருக்கும் ஒரே பெருமை, வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி , இத்தாலியில் இருந்து இந்த நகருக்கு வந்து வானொலிப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பித்ததுதான். 

சொந்த நாட்டில் தனது கண்டுபிடிப்பை விற்பனைப் பொருளாக்கத் தேவையான நிதி உதவி கிடைக்காததால், இங்கிலாந்துக்கு வந்து நிதி ஆதரவு பெற்று தொழிற்சாலையை செம்ஸ்போர்டில் தொடங்கியிருக்கிறார், 

1899ல் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலைக்கு the Wireless Telegraph & Signal Company என்று முதலில் பெயர். பின்னர் அது மார்க்கோனி கம்பெனி என்றாகியிருக்கிறது.

சில பரீட்சார்த்த ஒலிபரப்புகளுக்குப் பின், முதல் வெற்றிகரமான, பொது வானொலி ஒலிபரப்பு 1920ல் நடந்திருக்கிறது. 

தன்னுடைய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்று பிறகு லண்டன் அருகே உள்ள இந்த நகரில் வானொலி பெட்டிகளை தயாரிக்கவும், கம்பியில்லாத் தந்திக் கருவிகளைத் தயாரிக்கவும் தொழிற்சாலையை தொடங்கியிருக்கிறார் மார்க்கோனி. 

இந்த தொழிற்சாலையின் உற்பத்தி உச்சகட்டத்தில் இருந்த போது உள்ளூருக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதமாக விளங்கியதாம். சுமார் 4,500 பேருக்கு இத்தொழிற்சாலையால் வேலை வாய்ப்பு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் , இந்த தொழிற்சாலை இருந்த இடத்தை அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடமாக மாற்றியிருக்கிறார்கள். 
உள்ளூரில் சில வானொலி மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இதைத் தடுத்து, இக்கட்டிடத்தை வானொலி வரலாற்று நினைவுச்சின்னமாகப் பராமரிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 

இதை ஒரு வரலாற்று சின்னமாக மாற்ற உள்ளூர் கவுண்ட்டி ( உள்ளாட்சி நிறுவனம், County) பெரிய ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆனால் வானொலி பிறந்த ஊர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள் ! 

நகரின் மையப்பகுதியில் மார்க்கோனி சிலை ஒன்று அவரது நினைவை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. 

குடியிருப்புக் கட்டிடமாக மாற்றப்பட்டாலும், இந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவு கூரும் வண்ணம், பிரிட்டனில் இது போன்ற கட்டிடங்களில் பதிக்கப்படும் நீலத் தகவல் பலகை ( blue plaque) , இந்தக் கட்டிடத்திலும் வைக்கப்பட்டிருப்பது  சற்று ஆறுதல் தரும் விஷயம். 

மேலும் படிக்க:





Inline image

Inline image

Inline image


வானொலியின் ரொமான்ஸ் / A Radio Romance

In the last day of the Chennai Book Fair, I grab 
"A Radio Romance" by Garrison Keillor for only Rs.50/-. (Check the Amazon prize). It is about the radio story of WLT. Very interesting narration. A Must read book for Dxers. The story is about people associated with a fictional Minneapolis radio station called WLT. The events of the book span from the early years of radio broadcasting until the early years of television. The book reached the top ten of The New York Times Best Seller list in 1991. After read this book, you may also try to start a radio station!

புத்தகக் கண்காட்சியின் கடைசி நாள், "உங்களுக்கு மட்டும் எப்படி சார் இது போன்ற புத்தகங்கள் மாட்டுகிறது?" என்று பலரின் கேள்விகளுக்கு மத்தியில், இன்றும் ஒரு பொக்கிஷம் கிடைத்தது ரூ.50க்கு! Garrison Keillor* எழுதியுள்ள இந்த புத்தகத்தின் பெயர், A Radio Romance. 416 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தினை பென்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வானொலியின் காதலர்களுக்கு உகந்த புத்தகம் இது என்றால், அது மிகையில்லை. 


*Garrison Keillor, author of nearly a dozen books, is founder and host of the acclaimed radio show A Prairie Home Companion and the daily program The Writer's Almanac. He is also a regular contributor to Time magazine.


Inline image


Saturday, January 19, 2019

பிபிசியில் பெண்களின் பங்களிப்பு / Radio Girls

The sub topic of this book is "1926, the BBC. The nation listens". This is a book about women and radio. Yesterday I bought this "Radio Girls" book in the Chennai Book Fair for Rs.50/-. It is written by Sarah-Jane Stratford. A woman finds her voice. London, 1926. Maisie Musgrave is thrilled to land a job at the fledgling British Broadcasting Corporation whose new and electrifying radio network is captivating the nation. The stories is going on that way...

நண்பர்கள் பலரும் முகநூலில் பதிவிடும் புத்தகங்களை பார்த்துவிட்டு எனக்கும் ஒன்று வாங்கிவிடுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால், அப்படி அவற்றை எளிதாக வாங்கிவிட முடியாது. காரணம் பதிவிடும் அனைத்து புத்தகங்களும் ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்ட இடத்தில் இருந்து வாங்குபவை அல்ல. அவை அனைத்துமே பல மணி நேரம் செலவலித்து புத்தக குவியலில் இருந்து எடுப்பவை. அந்த வகையில் கிடைத்த மற்றும் ஒரு புத்தகம் தான் Sarah-Jane Stratford* எழுதிய Radio Girls. 448 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகமும் ரூ.50/-க்கு கிடைத்தது. 1926இல் பிபிசி உலக சேவையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எழுத்தப்பட்ட இந்த நாவல் ஒரு வரலாற்று பெட்டகம். பிபிசியில் பெண்களின் பங்களிப்பும், மிக முக்கியமான காலகட்டங்களில் அவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதை விரிவாக எழுதியுள்ளார் சாரா. இது போன்ற புத்தகங்கள் இன்னும் பல உள்ளன. தேடினால் கிடைக்கும், ஆனால் தேடத் தான் காலம் இல்லை.

*Sarah-Jane Stratford grew up in Los Angeles with a deep love of theatre and literature. After earning a bachelor's degree in history at UC Santa Cruz, she then obtained a master's degree in medieval history at the University of York in England.


#RadioGirls #SarahJaneStratford #வானொலி #பிபிசி

Inline image


B 18 Printed Schedule of All India Radio Home Services

Copy of B 18 Printed Schedule of All India Radio Home Services is available in the following link:


Via Jose Jacob, VU2JOS, DX INDIA YG

Friday, January 18, 2019

வானொலி புத்தகங்களின் வரிசை / Radio

If you have a patience, then you will get what you want. In that way, today I bought this "Radio Head: Up and Down the Dial of British Radio" for Rs.50/- in the Chennai Book Fair. It is written by John Osborne. He has long been a fan of radio - from late night sessions of John Peel to Test Match Special at dawn, he has always enjoyed tuning in to the riches of our best broadcasts. John's daily life is directly affected by his radio habit as like me! 

வானொலி புத்தகங்களின் வரிசையில் ரூ.50/-க்கு கிடைத்த மற்றும் ஒரு புத்தகம் தான் இந்த Radio Head: Up and Down the Dial of British Radio. இந்த புத்தகத்தினை John Osborne அவர்கள் எழுதியுள்ளார். 304 பக்கங்கள் கொண்டு வெளிவந்துள்ள இந்த புத்தகத்தின் அமேசான் விலை ரூ.1300/-.  எந்த வருடமும் இல்லாமல், இந்த வருடம் அதிகமாக வானொலி தொடர்பான புத்தகங்கள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. ஒரு வேலை தேடுதலும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கலாம். தேடுதல் மட்டும் இருந்தால் போதும், கிடைக்கவேண்டியது சரியான நேரத்தில் கிடைத்தே தீரும். இன்னும் தேடுவோம்!

* John Osborne graduated from the University of East Anglia in 2004. He has taught English in Austria and Germany, and has had poetry published in the Guardian and the Spectator. Radio Head is his first book.


#RadioHead #JohnOsborne #வானொலி #புத்தகம்

Inline image