Showing posts with label மொபைல் போனில் வானொலி. Show all posts
Showing posts with label மொபைல் போனில் வானொலி. Show all posts

Sunday, June 05, 2011

அனைத்து கைப்பேசிகளிலும் வானொலிகளைக் கேட்கலாம்

கடந்த இதழ்கள் கிடைத்தன. சாதனை மன்னர் சங்கரண்ணா அவர்களின் சிறப்பு இதழ் நன்று. மொபைல் போனில் வானொலி கேட்பது பற்றிய மின்னக்கல் செல்வராஜ் அவர்களின் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. நானும் இந்த வசதியுடன் கூடிய கைப்பேசியை வாங்க ஆவலாக உள்ளேன். குறைந்த விலையுள்ள சில கைப்பபேசி மாடல்களைத் தெரிவித்தால் பயன் அடைவேன்.
- பி. குமரேசன், சென்னை – 44, (ADXC 2136).

(தங்களின் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். இணையத்தில் வானொலிகளை கேட்கும் வசதிகள் கொண்ட கைப்பேசிகள் இன்று ரூ. 2000த்தில் இருந்து கிடைக்கின்றன. குறிப்பாக நோக்கியா வெளியிட்டுள்ள ரூ. 2500க்கு மேற்பட்ட விலையுள்ள அனைத்து கைப்பேசிகளிலும் இந்த வசதியுள்ளது. இணைய வசதியுள்ள அனைத்து கைப்பேசிகளிலும் வானொலிகளைக் கேட்கலாம். இன்று ரூ. 90க்கு கட்டற்ற பதிவிறக்க வசதியுடன் கூடிய கைப்பேசி சேவைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் நீங்கள் 24 மணி நேரமும் வானொலியை இணையத்தில் உங்கள் கைப்பேசி ஊடாக கேட்டாலும் ரூ. 90க்குள் செலவு அடங்கிவிடும். - ஆர்)