Showing posts with label பி.எஸ்.ஜி. வானொலி. Show all posts
Showing posts with label பி.எஸ்.ஜி. வானொலி. Show all posts

Sunday, May 08, 2011

எதிரொலி

சர்வதேச வானொலியின் 130 மற்றும் 131 எண் கொண்ட மாத இதழ்கள் கிடைக்கப்பெற்றோம். பொள்ளாச்சியில் நவம்பர் 13-14ல் நடந்த ஹாம் திருவிழா பற்றி படித்து பரவசமடைந்தோம். நான் இதுவரை எந்த ஹாம் திருவிழாக்களிலும் கலந்துகொண்டது இல்லை. எங்கள் நகருக்கு அருகிலேயே நடந்தும் எனக்கு தகவல் தெரியாததால் கலந்துகொள்ள இயலவில்லை. அடுத்தமுறை முன்கூட்டியே தகவல் தந்தால் கலந்துகொள்ள ஆவலாக உள்ளேன். – என். பழனிசாமி, கோவை -28 (ADXC 2172).

(நிச்சயமாக அடுத்த முறை நடக்கும் ஹாம் திருவிழா பற்றியத் தகவலை முன்கூட்டியே அறியத்தருகிறோம். மேலும் தாங்கள் பி.எஸ்.ஜி. வானொலி நிலையத்தின் முகவரியை தந்துள்ளீர்கள். நன்றி. PSG Community Radio, PSG College of Technology campus, Avinashi Road, Peelamedu Po, Coimbatore – 641 004, Tel: 0422 4344747, 4344748, Email: psgers@psgtech.ac.in – ஆர்.)