Sunday, May 29, 2011

பி.பி.சி. தமிழோசை சங்கரண்ணா பற்றிய சிறப்பு இதழ்

சர்வதேச வானொலி இதழ்கள் கிடைத்தன. தேம்ஸ் நதிக்கரை இலண்டன் மாநகரிலிருந்து ஒலிபரப்பாகிவரும் பி.பி.சி. தமிழோசையில் பணிபுரிந்து வெள்ளிவிழா கண்ட மன்னன் சங்கரண்ணா பற்றிய சிறப்பு இதழ் மிக சிறப்பாக இருந்தது பாராட்டுக்கள்.
- பி.எஸ். சேகர், தலைஞாயிர் (ADXC 2078).

Sunday, May 22, 2011

ஹாம் திருவிழா


இதழ் எண் 130 மற்றும் 131 ஆகியவை கிடைக்கப்பெற்றேன். ஜப்பான் சிற்றலை வானொலி நேயர் மன்றத்தின் செயலாளர் டோஷி அவர்களுடனான ஆசிரியரின் பயண அனுபவ கட்டுரை சிறப்பாக இருந்தது. “ஹாம் திருவிழா” பற்றிய செய்தியினை முன்பே நமது இதழில் வாசகர்களுக்கு தெரிவித்து இருந்தால் அனைவரும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும். ஹாம் பற்றிய தெளிவான கட்டுரைகளை விரைவில் வெளியிடுங்கள். சங்கரண்ணா மற்றும் சுந்தா பற்றிய கட்டுரைகள் சிறப்பாக இருந்தன.
– டாக்டர் எம்.எஸ். கோவிந்தராஜன், விஜயபுரம் வடக்கு (ADXC 2177).

(அன்பு நண்பரின் கருத்துரைக்கு நன்றி. ஹாம் திருவிழா பற்றிய தகவல் உடனுக்குடன் எமது டி.ஜி. எஸ்.எம்.எஸ் நெட்டில் வெளியிட்டு வருகிறோம். நீங்களும் அந்த குறுந்தகவல்களைப் பெற்று பயனடையலாம். ஹாம் வானொலி தொடர்பான ஒரு தொடர் நமது இதழில் ஏற்கனவே வெளிவந்துள்ளது. – ஆர்)

Sunday, May 15, 2011

பி.பி.சி. சங்கரமூர்த்தி

கடந்த இதழ் பி.பி.சி. சங்கரமூர்த்தி அவர்களின் வாழ்க்கை குறிப்புகளை தந்து அசத்திவிட்டீர்கள். சாதனை மன்னர் சங்கரண்ணா பற்றியத் தகவல்கள் அருமை. மொபைல் போனில் இனி சர்வதேச வானொலிகளைக் கேட்கலாம் என்பது எங்களுக்கு புதிய தகவலாக உள்ளது. – பொருனை பாலு, திருநெல்வேலி – 6 (ADXC 2062).

Sunday, May 08, 2011

எதிரொலி

சர்வதேச வானொலியின் 130 மற்றும் 131 எண் கொண்ட மாத இதழ்கள் கிடைக்கப்பெற்றோம். பொள்ளாச்சியில் நவம்பர் 13-14ல் நடந்த ஹாம் திருவிழா பற்றி படித்து பரவசமடைந்தோம். நான் இதுவரை எந்த ஹாம் திருவிழாக்களிலும் கலந்துகொண்டது இல்லை. எங்கள் நகருக்கு அருகிலேயே நடந்தும் எனக்கு தகவல் தெரியாததால் கலந்துகொள்ள இயலவில்லை. அடுத்தமுறை முன்கூட்டியே தகவல் தந்தால் கலந்துகொள்ள ஆவலாக உள்ளேன். – என். பழனிசாமி, கோவை -28 (ADXC 2172).

(நிச்சயமாக அடுத்த முறை நடக்கும் ஹாம் திருவிழா பற்றியத் தகவலை முன்கூட்டியே அறியத்தருகிறோம். மேலும் தாங்கள் பி.எஸ்.ஜி. வானொலி நிலையத்தின் முகவரியை தந்துள்ளீர்கள். நன்றி. PSG Community Radio, PSG College of Technology campus, Avinashi Road, Peelamedu Po, Coimbatore – 641 004, Tel: 0422 4344747, 4344748, Email: psgers@psgtech.ac.in – ஆர்.)

Sunday, May 01, 2011

வெரித்தாஸ் தமிழ்பணியின் புதிய இணைய முகவரி

வெரித்தாஸ் தமிழ்பணியின் புதிய இணைய முகவரி: www.rveritas-asia.org/tamil நமது வெரித்தாஸ் வானொலியும் தனது நேயர்களுக்கு QSL வண்ண அட்டையை தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு நீங்கள் வான் அஞ்சலில் கடிதம் எழுத வேண்டும்.

Mr. Alex Movilla,

Technical Engineer,

Audience Research,

P.O. Box: 2642,

Quezon City,

Manial 1166,

Philipines.

Email: rvaprogram@rveritas-asia.org

(Fr. Jerom, RVA Tamil)