Sunday, April 10, 2011

வானொலி உலகம்

 நேபாள அரசானது 77 வானொலி மற்றும் தொலைகாட்சிகளுக்கு வழங்கிய உரிமையை ரத்து செய்துள்ளது.
  •  இந்தியாவின் முதல் பேசும் இணைய வானொலியை ரிலையன்ஸ் நிறுவனம் "பிக் நெட் ரேடியோ’ என்ற பெயரில் துவங்கியுள்ளது. மூன்றாம் தலைமுறை கைப்பேசிகளில் இந்த சேவையை உபயோகிக்கலாம்
  •  நோர்வே தனது இரண்டு மத்திய அலைவரிசை வானொலிகளை நிறுத்திவிட்டது
  •  கொல்லத்தில் உள்ள பிசப் பென்சிகர் மருத்துவ மனையில் இந்தியாவின் முதல் “மருத்துவமனை சமுதாய வானொலி” தொடங்கப்பட்டுள்ளது.
  •  பி.பி.சி. உலக சேவை ஆப்கானிஸ்தானில் உள்ள நேயர்களுக்கு இலவசமாக வானொலிப் பெட்டியை வழங்கிவருகிறது.
  •  ஹாங்காங் அரசு மூன்று டி.ஏ.பி வானொலிகளை துவங்க அனுமதி வழங்கியுள்ளது.
  •  இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் காமினி விஜயவர்தனா தொடர்ந்து 33 மணி நேரம் வானொலியில் நேரடியாக பேசி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
  •  குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அகில இந்திய வானொலி 1000 கிலோ வாட் சக்தி கொண்ட இரண்டு மத்திய அலை டி.ஆர்.எம் ஒலிபரப்பிகளை நிறுவிவருகிறது.
  •  ஜெர்மன் வானொலியானது வங்க தேசத்தில் பண்பலையில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.
  •  பல்கேரிய வானொலி தனது அனைத்து டி.ஆர்.எம். ஒலிபரப்பு சேவைகளையும் நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.
  •  பங்களாதேஷின் அரசு வானொலியானது ஜப்பான் வானொலியோடு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஜப்பானிய தொழில்நுட்பத்தினை அது விரைவில் பெற உள்ளது.
  •  ஜெர்மன் வானொலி தான் இந்தியாவிற்காக செய்து வரும் ஹிந்தி மற்றும் வாங்காள மொழி சிற்றலை சேவைகளை நிறுத்திவிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
  •  ஆத்மீக யாத்திரை வானொலி தான் தற்பொழுது மிக அதிக ஆசிய மொழிகளில் ஒலிபரப்பும் வானொலியாக இருந்து வருகிறது. ஒலிபரப்பும் மொழிகளின் எண்ணிக்கை 110 ஆகும்.
  •  உங்களின் கைப்பேசியிலேயே தற்பொழுது வாய்ஸ் ஆப் ரஷ்யாவை கேட்க வசதியினை செய்துள்ளனர். முகவரி: www..english.ruvr.ru/cell  இலங்கை அரசானது சட்டவிரோதமாக மதம் சார்ந்து செயல்பட்ட வானொலிகளைத் தடை செய்துள்ளது.
  • – மின்னக்கல் செல்வராஜ் (ADXC 2080)