Thursday, July 13, 2006

ஒலி விமலா வந்துட்டேய்யா.. வந்துட்டேன்!!

யாராவது 'புகைப்படம் எடுக்கலாம் வாங்க' என்று
அழைத்தால்.. எனக்கு ஒரே சங்கடமாகப் போய்விடும்
சிறு வயதிலிருந்தே புகைபடத்திற்கு எப்படி சிரிப்பது,
எந்த அளவுக்கு சிரிப்பது என்று குழப்பம்!

ஒலிக்கு வந்தப் பின் தொடக்கத்தில் எனக்கு
நடுக்கமாக இருந்தது..
இங்கு பல நிகழ்ச்சிகளுக்குச் செல்வதால்... பல
புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன..
smile pls... :D click.. click..

அப்படி 'முதல்' முறையாக மிகக் குறைவான ஒப்பனையுடன் பயத்தோடு நான் எடுத்த புகைப்படம் தான் இது!
கன்னத்தில் கை வைத்து 'அந்தக் காலத்து' பாணியில்.. கொஞ்சம் old fashion-தான்..
இருந்தாலும் பரவாயில்லை.. ஏதோ பார்ப்பதற்கு ஓகே! hehehe
இப்பொழுது புகைப்படங்களை கொஞ்சம் தைரியமாக எடுத்துக் கொள்கிறேன்..
ஏதோ சமாளிக்கிறேன் :)

அண்மையில் ஒரு மின்னஞ்சல் வந்தது..
எனது இந்தப் படத்தை யாரோ மாற்றி,
இணையத்தில் வெளியிட்டதை..
நேயர் ஒருவர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்..
இணையத்தில் பல தில்லு முல்லு.. அதில் இதுவும் ஒன்னு!
http://www.globaltamil.com/photoshow/displayimage.php?pos=-10737

++++++++++++++++++++++++++
வந்துட்டேய்யா.. வந்துட்டேன்!!
சரி.. எனது blog பக்கத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்?
ஒலி விமலா? boringgg..nyeeee
விமலாவின் கிருக்கல் .. நடிகர் பார்த்திபன் பார்த்தால் வம்புதான்
அப்படியென்றால்.. என்ன பெயர் வைக்க?
பிள்ளைக்குக் கூட பெயர் வைத்து விடலாம் போல இருக்கே?!
சரி.. சரி..
கொஞ்சம் பெட்டிக்கு வெளியே யோசித்துப் பார்க்கலாம்..
அதாங்க out of the box!!..
ம்ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ ஊஊஊஊஊ

அண்மையில் மிகவும் சர்ச்சையை உண்டாக்கிய பெயர்.... 'Da Vinci Code'
எல்லோரையும் 'அடேங்கப்பா' என்று சொல்ல வைத்த பரபரப்பான கதை
புரியாத புதிரால் புகழ்பெற்ற நாவல்.. Da Vinci Code
நேயர்களைக் கேள்விகள் கேட்டுக் குழப்புவதில் எனக்கு எப்பொழுதுவே கொள்ளை ஆசை..
Da Vinci Code... அதையே கொஞ்சம் 'உல்டா' செய்தால்?
Da Vimala Code
Da Vi Code
Da Vim Code
(விமலாவின் தலைக்கு அருகில் light bulb-ல் ஒளி)
Da Vinci Code-ஐ மாற்றி Da Vimci Code!!
நல்லா இருக்கே!
ok! :)
இனி என் blog பக்கத்தின் பெயர் http://davimcicode.blogspot.com/
பேரு நல்லா இருக்கா?

தனிப்பட்ட முறையில் நான் blog செய்துக் கொண்டிருந்தாலும்,
இப்பொழுது ஒலி விமலாவாக...
வானொலியில் சொல்லும் கதைகளை
'குண்டக்க மண்டக்க' கேள்விகளை
'ஒரே கேள்வி'களை
குட்டி குட்டிக் அறுவைகளை
பிரபலங்களைப் பேட்டிக் கண்ட அனுபவங்களை
நான் படித்து மகிழ்ந்த கதைகளை, தகவல்களை
புகைப்படங்களை
சுவாரஸ்யமான அனுபவங்களை
உங்களோடு பகிர்ந்துக் கொள்ளவுள்ளேன்..

நீங்களும் படித்து மகிழலாம்..
உங்கள் கருத்துக்களையும் யோசனைகளையும் தெரிவிக்கலாம்..
யார் மனதையும் புண்படுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்..
சரியா? (",)