Sunday, July 31, 2022

செஸ் ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி அஞ்சல் தலை

44th FIDE Chess Olympiad Chennai 2022


Inline image

Inline image



அஞ்சல் தலை சேகரிப்பு என்பது ஏதோ குழந்தைகள் மட்டுமே சேகரிப்பது என்று ஒரு பொது புத்தியுள்ளது.  அது அப்படியானதல்ல. இதில் கிடைக்கும் பொது அறிவு அளப்பரிய ஒன்று. 


மாமல்லபுரத்தில் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்ற சதுரங்கப் போட்டியை மையப்படுத்தி இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள இந்த முதல் நாள் கடித உறை (first day cover), சிறப்பு அஞ்சல் தலை, முதல் நாள் முத்திரை ஆகியவை தற்பொழுது அண்ணா சாலை, அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தில் (Philatelly Beurue) ரூ.5க்கு கிடைக்கிறது (அஞ்சல் தலை மட்டும்).


சென்னையில் பிரமாண்டமாக நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்பதால், இந்த அஞ்சல் உறை மற்றும் அஞ்சல் தலையை மறவாமல் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நாளை இதன் மதிப்பு நீங்களே எதிர்பாராத வகையில் மாறும் என்பதில் ஐயமில்லை.


#chess #stamp #olympiad #philatelist #fdc #indiapost #firstdaycover #cancellation

Tuesday, July 19, 2022

The Routledge companion to radio and podcast studies


Inline image


வானொலித் தொடர்பாக மற்றும் ஒரு முக்கிய புத்தகத்தினை ரட்லெட்ஜ் (Routledge) பதிப்பகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. நான் பல வருடங்களாக சொல்லி வந்ததையே இந்த புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.

வானொலி என்றுமே தமக்கான வெளியைக் கட்டமைத்துக்கொள்ளும் என்பதற்கு இந்த The Routledge companion to radio and podcast studies எனும் தலைப்பே உதாரணம்.

அடுத்தகட்டத்திற்கு எப்படி வானொலி பயணித்துள்ளது என்பதை உலகம் முழுவதும் இருந்து பல ஆய்வாளர்களும் விரிவான கட்டுரைகளை இதில் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து ஹைத்ராபாத் பல்கலைக்கழத்தின் வினோத் பவ்ரளா, கஞ்சன் மாலிக் குழு ஒரு சிறப்பான கட்டுரையை வடித்துள்ளனர்.

சமூக ஊடக காலத்திலும் வானொலிக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று.

தொடக்க கால வானொலியில் இருந்து இன்றைய பாட்காஸ்டிங் வரை எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டது என்பதை விரிவாக அலசுகிறது இந்த புத்தகம். 

தொகுத்த மியா லின்க்ரெம் மற்றும் ஜெசன் லெவ்கிலியோவுக்கும், வெளியிட்ட ரட்லெட்ஜ் பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.

The Routledge companion to radio and podcast studies

Routledge published an important book on radio last month. The title of this book is what I have been saying for years.

The title The Routledge companion to radio and podcast studies is an example of how radio creates its own space.

Many researchers from all over the world have written detailed articles on how radio has traveled to the next level.

Vinod Pawrala and Kanchan Malik team from University of Hyderabad in India have written an excellent paper.

This book is proof that radio definitely has a place in the age of social media.

This book examines in detail how it has adapted from early radio to today's podcasting.

Kudos to Mia Lingrem and Jason Levglio for editing and Rutledge Publishing for published it.

Monday, July 18, 2022

World Listening Day


Inline image



Every year on July 18th, World Listening Day encourages people to take time to listen to the sounds of nature. It's also a day to learn more about field recording.

Listening plays an important role in understanding one another. Listening is also important when trying to understand the world around us. Learning about the relationship between humans and their environment through sound is called acoustic ecology.

You probably hear sounds in your natural environment every day. These sounds might include the rustling of leaves in the wind. The babbling of a brook nearby. Birds singing as the sun rises. Some sounds might be annoying and others more soothing. Acoustic ecologists take sound listening to another level. They take time to really listen to the sounds and interpret their meanings. When sounds begin to change over time, it might indicate there are changes in the environment. When animal sounds begin to disappear it might mean they are losing their habitat.

Those who record these kinds of sounds engage in a practice called field reporting. Some who do this lie on the ground listening for hours at a time. They also travel to different kinds of environments to record sounds. These environments might include forests, deserts, plains, oceans, and mountains. Some also do field recording in urban areas. Those in cities might listen to see how noise pollution is changing the environment. Field reporters know that sounds in any environment are trying to communicate something. All they need to do is stop and listen.

Artists, scientists, ecologists, and others who want to better understand the world's natural environment hold a variety of events on this day. These events include educational seminars, listening parties, and special performances. To participate:

Go outside and take time to listen to the sounds of the world around you.
Learn more about field recording and try to record some natural sounds in the outdoors.
Read the book, "The Tuning of the World" by R. Murray Schafer.
Watch videos online about field recording.
Spread awareness for this day on social media

In 2010, the WLP created World Listening Day. They chose July 18th to commemorate R. Murray Schafer's birthday. Schafer is a renowned Canadian composer, author, and environmentalist. He is best known for his studies on acoustic ecology.

Most people do not listen with the intent to understand; they listen with the intent to reply.

When people talk, listen completely. 

The world is giving you answers each day.Learn to listen.

Happy World Listening Day  🎧

Credit: Jeganath Mani, Stamp Today WG

Wednesday, June 29, 2022

வானொலி நாளை

தமிழின் வளர்ந்துவரும் முக்கிய ஊடகமான TN MEDIA 24ல் வானொலி தொடர்பாக மூன்று பாகங்கள் கொண்ட நீண்ட பேட்டியினை நண்பர் நேசகானம்  Praba Karan அவர்கள் எடுத்தார்கள்.  அதில் Public Service Broadcasting, All India Radio, External Service, Shortwaves, FM, Internatinal Radio, DAB, DRM, SDR, Ham Radio, Community Radio, Podcasting, Private Radio உள்ளிட்ட இன்னும் பல தலைப்புகளில் பேசியுள்ளோம். அதன் முதல் பகுதியை இந்த தொடுப்பில் கேட்கலாம்.


https://m.youtube.com/watch?v=_rX0oe5S_GU


#PublicServiceBroadcasting, #AllIndiaRadio, #ExternalService, #Shortwaves, #FM, #InternatinalRadio, #DAB, #DRM, #SDR, #HamRadio, #CommunityRadio, #Podcasting, #PrivateRadio #dxing #dx #sw #mw

Inline image

Inline image


Wednesday, March 02, 2022

மார்ஷல் ரோட்டின் வானொலி Audio visual media in Chennai


Inline image



Chennai Book Fair 2022


வரலாற்றினை இன்று சுவாரஷ்யமாக சொல்லுவது ஒரு கலையாகி வருகிறது. சென்னையைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்தாலும், இந்த மூன்று பாகங்கள் கொண்ட "Madras: A 400 year record of the first city of Madras India" தனித்துவமானது. இதனை திரு.எஸ்.முத்தையா தொகுத்துள்ளார்.


இதில் என்னை கவர்ந்த கட்டுரை, சென்னையில் வானொலி வந்த வரலாற்றினைப் பல முக்கியத் தகவல்களுடனும், ஆதாரத்துடனும் பதிவு செய்துள்ளார் திரு.சி.ஆர்.ராமசாமி. 


நானூக் கட்டடம் இருந்த இடத்தினையும், மார்ஷல் சாலையையும் இன்றும் கடக்கும் போது, இந்த புத்தகத்தினை மறக்க முடியாது. கொஞ்சம் விலை அதிகம், என்றாலும் அத்தனை தகவல்களுக்கும், விலை ஒரு பொருட்டல்ல. பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.


#சென்னைபுத்தககாட்சி #வானொலி #மார்ஷல்ரோடு #அகிலஇந்தியவானொலி #chennaibookfair 

Monday, February 14, 2022

World Radio Day Celebrations in University of Madras

World Radio Day* celebrated in the University of Madras with Dr.N.Mohan, who demonstrated the Crystal Radio, DRM and SDR. 


உலக வானொலி தினம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் டி.ஆர்.எம் வானொலி பற்றிய செயல் முறை விளக்கத்தினை மாணவர்களுக்கு வழங்கினார்கள் முனைவர்.ந.மோகன் அவர்கள்.


*World Radio Day Postcards are available for Swap.



Inline image

Inline image

Inline image

Inline image

Inline image

Inline image

Inline image



#worldradioday #drm #crystalradio #unom #postcard #postcrossing

Saturday, February 12, 2022

கோடைப் பண்பலையின் உலக வானொலி தின கொண்டாட்டம்

World Radio Day Celebrations-6

Let's celebrate World Radio Day with AIR Kodai FM 100.5. 


கோடைப் பண்பலை (100.5) வானொலியில் நாளை (13-2-2022) ஞாயிறு மதியம் 11.00 மணிக்கு இணைய உள்ளேன். 

வாருங்கள் உலக வானொலி தினத்தினை கோடைப் பண்பலை  வானொலியோடு இணைந்து கொண்டாடுவோம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள கார்த்திகேயன் அவர்களுக்கும், நிலைய இயக்குநருக்கும் நன்றி!



Inline image


#worldradioday #wrd2022 #Jaisakthivel #ஜெய்சக்திவேல் #உலகவானொலிதினம் #வானொலி #கோடைப்பண்பலை

Friday, February 11, 2022

இணைய வானொலிகளின் நோக்கம் மற்றும் வாய்ப்புகள் / Internet Radio: Purpose and Prospects

World Radio Day Celebrations - 4

Internet Radio: Purpose and Prospects


உலக வானொலி தின கொண்டாட்டங்களில் புது தில்லி நிஸ்கார்ட் அமைப்பு நடத்தவுள்ள வெப்பினாரில் "இணைய வானொலிகளின் நோக்கம் மற்றும் வாய்ப்புகள்" தொடர்பான தலைப்பில் பேச உள்ளேன். வாய்ப்பு இருப்பவர்கள் இணைய வழியில்  கலந்துகொள்ளலாம்.


#niscort #worldradioday #wrd2022 #webinar #jaisakthivel #உலகவானொலிதினம் #வானொலி #வெப்பினார் #ஜெய்சக்திவேல்



Inline image


Thursday, February 10, 2022

உலக வானொலி நாள் சிறப்புக் கருத்தரங்கம்

World Radio Day Celebrations: 3


பன்னாட்டு தமிழ் மற்றும் தொடர்பியல் ஆய்வு மையம்

International Research Centre for Thamizh and Communication Studies(IRCTCS)

தமிழ்நாடு, இந்தியா


உலக வானொலி நாள் சிறப்புக் கருத்தரங்கம்


தலைப்பு 

 "ஆம்! வானொலி இன்று முக்கியமானதும் நம்பகமானதும் ஆகும்"


சிறப்பு பேச்சாளர் :

முனைவர்.தங்க.ஜெய்சக்திவேல்

உதவிப் பேராசிரியர், 

இதழியல் மற்றும் தொடர்பாடல் துறை,

சென்னை பல்கலைக்கழகம்.


நாள் - 13.02.2022

காலை - 10.00மணி


கூகுள் மீட் - 

https://meet.google.com/iuf-rttx-mfk


World Radio Day - Yes To Radio, Yes To Trust



Inline image


#உலகவானொலிதினம் #வானொலி #வெப்பினார் #ஜெய்சக்திவேல்

#WorldRadioDay #unesco #IRCTCS #webinar #jaisakthivel

Wednesday, February 09, 2022

புதிய தலைமுறை கொண்டாடும் இலங்கை வானொலி

கடந்த 8-2-2022 மதியம் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "நியூஸ் 360" நிகழ்ச்சி இலங்கை வானொலியை கொண்டாடியது. ஒரு சக ஊடகம் மற்றொரு ஊடகத்தினை இந்த வியாபார உலகத்தில் கொண்டாடுவது அரிது. 

பிப்ரவரி 13, உலக வானொலி தினம் கொண்டாடப்படும் இந்த சமையத்தில் இந்த நிகழ்ச்சி முக்கியமான ஒன்று. நிகழ்ச்சியை நெறிப்படுத்தி வழங்கிய திரு.கார்த்திகேயன் மற்றும் பின்னால் இருந்து நிகழ்ச்சி சிறப்பாக அமைய இயங்கிய அருண் உட்பட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நேயர்கள் சார்பாக நன்றி.


உலக வானொலி தின கொண்டாட்டம் கூ செயலியோடு / World Radio Day Celebration with Koo


Inline image

World Radio Day Celebrations: 2

உலக வானொலி தின கொண்டாட்டத்தில் கூ தமிழ் (koo) செயலியும் இணைந்து கொள்கிறது. வழக்கமான தலைப்பாக இல்லாமல் இந்த முறை இதில் கலந்துகொள்பவர்களும் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சியை அமைத்துள்ளார் கார்த்திக்.


பல்வேறு தகவல்களை இதில் பேசவுள்ளோம். இன்றைய சூழலில் ஒலி ஊடகம் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகி வருகிறது. அதில் தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் ஒவ்வொருவரும் பங்களிப்பாளர்களாகவும், பயனடைபவர்களாகவும் இருந்து வருகிறீர்கள்.



Let's celebrate WRD with Koo App. Link will share for those who are interested.


#worldradioday #wrd2022 #koo #webinar #jaisakthivel #உலகவானொலிதினம் #வெப்பினார் #ஜெய்சக்திவேல்

Tuesday, February 01, 2022

சிவகாசியில் ஒரு வானொலி / A radio from Sivakasi


Inline image


ANJAC COMMUNITY RADIO will go on air from 2-2-22

சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் இருந்து 
அஞ்ஜாக் சமுதாய வானொலி 90.4 பண்பலைவரிசையில் 2-2-22 முதல் தனது ஒலிபரப்பினைத் தொடங்கவுள்ளது.

Friday, January 28, 2022

SLBC’s certificate Course on Radio Production

இலங்கை வானொலியானது வானொலியில் அறிவிப்பாளர் ஆக விரும்புபவர்களுக்கு, அறிவிப்பாளர் பயிற்சியை, இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர்களைக் கொண்டு வழங்குகிறது. தமிழ் மொழிக்கான பயிற்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வழங்கப்படுகிறது.


இது தவிர வானொலி நிகழ்ச்சியை தயாரிப்பதற்கான பயிற்சியையும் வழங்குகிறார்கள். 

மேலதிக விபரங்களுக்கு விளம்பரத்தில் உள்ள தொலைப்பேசி எண்களை இலங்கை வாசிகள் தொடர்புகொள்ளலாம். (ஜெய்சக்திவேல்)


#இலங்கை #வானொலி #slbc #radio



Inline image


BBC Budget cut / பிபிசி நிதி குறைப்பு

பிபிசி உலக சேவைக்கு ஒதுக்கப்படும் நிதி குறைய வாய்ப்புள்ளதாக உலக சேவையின் இயக்குநர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

"On whether the BBC would reduce its funding of over £250m per year given to the World Service, he said: 'It will be evaluated. It's not off the table. ... It's whether we're investing the full £254m from the UK licence fee money [into] it.'" (Kim Andrew Elliott)

https://pressgazette.co.uk/bbc-licence-fee-freeze-world-service-local-democracy-reporters/

Tuesday, January 25, 2022

World Radio Day / உலக வானொலி தினம் 2022


Inline image

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13, உலக வானொலி தினமாகக் யுனஸ்கோவால் கொண்டாடப்பட்டு வருகிறது. வாருங்கள் இந்த வருடமும் சிறப்பு உலக வானொலி தின அஞ்சல் அட்டையுடன் இணைந்து கொண்டாடலாம்.


Proclaimed in 2011 by the Member States of UNESCO, and adopted by the United Nations General Assembly in 2012 as an International Day, February 13 became World Radio Day (WRD). The theme of the 2022 edition of World Radio Day is thus devoted to "Radio and Trust". Let's come and celebrate the event with webinar's, seminars, workshops and exhibitions. More details on first comment.


#wrd #worldradioday #radio #unesco #webinar #உலகவானொலிதினம் #வானொலி #ரேடியோ 

Saturday, January 22, 2022

ஆஜாத் ஹிந்த் வானொலி அஞ்சல் அட்டை


Inline image



சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் தொடங்கப்பட்டது ஆஜாத் ஹிந்த் வானொலி (Azad Hind Radio). இது தமிழிலும் ஒலிபரப்பியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய அஞ்சல் துறை இன்று வெளியிட்ட ஆறு அஞ்சல் அட்டைகளில் ஒன்று இந்த வானொலியை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது.

One more interesting postcard related to radio released today by India Post!

Sunday, January 16, 2022

வானொலிப் பெட்டி திரைப்படம் யூடியூப்பில்

வானொலி பெட்டியை மையப்படுத்தி தமிழில் மிகக் குறைந்த திரைப்படங்களே வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த இந்த 'ரேடியோ பெட்டி' பூசான் திரைப்பட விழாவில் வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் சர்வதேச கோவா திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வான ஒரே தமிழ் படம் இது மட்டுமே. தற்பொழுது யூடியுப்பில் இது முழுமையாக காணக்கிடைக்கிறது.

A Tamil movie related to Radio Set. It was also won the award in Busan International Film Festival.

RADIOPETTI:

watch now