- இந்தியாவின் முதல் பேசும் இணைய வானொலியை ரிலையன்ஸ் நிறுவனம் "பிக் நெட் ரேடியோ’ என்ற பெயரில் துவங்கியுள்ளது. மூன்றாம் தலைமுறை கைப்பேசிகளில் இந்த சேவையை உபயோகிக்கலாம்
- நோர்வே தனது இரண்டு மத்திய அலைவரிசை வானொலிகளை நிறுத்திவிட்டது
- கொல்லத்தில் உள்ள பிசப் பென்சிகர் மருத்துவ மனையில் இந்தியாவின் முதல் “மருத்துவமனை சமுதாய வானொலி” தொடங்கப்பட்டுள்ளது.
- பி.பி.சி. உலக சேவை ஆப்கானிஸ்தானில் உள்ள நேயர்களுக்கு இலவசமாக வானொலிப் பெட்டியை வழங்கிவருகிறது.
- ஹாங்காங் அரசு மூன்று டி.ஏ.பி வானொலிகளை துவங்க அனுமதி வழங்கியுள்ளது.
- இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் காமினி விஜயவர்தனா தொடர்ந்து 33 மணி நேரம் வானொலியில் நேரடியாக பேசி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
- குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அகில இந்திய வானொலி 1000 கிலோ வாட் சக்தி கொண்ட இரண்டு மத்திய அலை டி.ஆர்.எம் ஒலிபரப்பிகளை நிறுவிவருகிறது.
- ஜெர்மன் வானொலியானது வங்க தேசத்தில் பண்பலையில் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.
- பல்கேரிய வானொலி தனது அனைத்து டி.ஆர்.எம். ஒலிபரப்பு சேவைகளையும் நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.
- பங்களாதேஷின் அரசு வானொலியானது ஜப்பான் வானொலியோடு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஜப்பானிய தொழில்நுட்பத்தினை அது விரைவில் பெற உள்ளது.
- ஜெர்மன் வானொலி தான் இந்தியாவிற்காக செய்து வரும் ஹிந்தி மற்றும் வாங்காள மொழி சிற்றலை சேவைகளை நிறுத்திவிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
- ஆத்மீக யாத்திரை வானொலி தான் தற்பொழுது மிக அதிக ஆசிய மொழிகளில் ஒலிபரப்பும் வானொலியாக இருந்து வருகிறது. ஒலிபரப்பும் மொழிகளின் எண்ணிக்கை 110 ஆகும்.
- உங்களின் கைப்பேசியிலேயே தற்பொழுது வாய்ஸ் ஆப் ரஷ்யாவை கேட்க வசதியினை செய்துள்ளனர். முகவரி: www..english.ruvr.ru/cell இலங்கை அரசானது சட்டவிரோதமாக மதம் சார்ந்து செயல்பட்ட வானொலிகளைத் தடை செய்துள்ளது.
- – மின்னக்கல் செல்வராஜ் (ADXC 2080)
If you would like.... to here the first hand world news as it is happening from a big or small station Then.. If you live in South Asia and Radio listening is your favourite hobby then you must see this page everyday.
Sunday, April 10, 2011
வானொலி உலகம்
நேபாள அரசானது 77 வானொலி மற்றும் தொலைகாட்சிகளுக்கு வழங்கிய உரிமையை ரத்து செய்துள்ளது.
Labels:
ஆத்மீக யாத்திரை,
மின்னக்கல் செல்வராஜ்,
வானொலி உலகம்