Sunday, November 27, 2022

Broadcasting related definitive stamp from India Post!



இரண்டு வகையான அஞ்சல் தலைகளை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டு வருகிறது. அவை Commemarative Stamp and Definitive Stamp. 1988ல் தொலைக்காட்சி ஒளிபரப்பினை மையப்படுத்தி இந்த definitive அஞ்சல் தலையை 40 பைசாவுக்கு வெளியிட்டது. தற்பொழுது மீடியா தொடர்பான அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மத்தியில் மிகவும் விரும்பி வாங்கும் அஞ்சல் தலையாக இது உள்ளது. 40 பைசா அஞ்சல் தலை இன்று ரூ.10.00 க்கு விற்கப்படுகிறது. அடேங்கப்பா! எத்தனை மடங்கு அதிகமாகிவிட்டது!!

There are two types of postage stamps issued by the Indian Postal Department. They are Commemorative Stamp and Definitive Stamp. In 1988, the definitive postage stamp was issued for 40 paise, focusing on television broadcasts. It is currently the most sought-after stamp among media-related stamp collectors. A 40 paisa stamp is selling for Rs.10.00 today. Atengappa! How many times more!!
Credit: @hazeemmohammed

#indiapost #broadcasting #stamp #philatelic #philatelist #philately #tv #dish #transmitter

Saturday, November 26, 2022

First Special Cover for Community Radio / சமுதாய வானொலிக்காக, முதல் சிறப்பு அஞ்சல் உறை







India Post released a lot of special covers on Radio, but for the community radio, this is the first special cover dedicated to  Community Radio, which is run by an NGO called Snehapoorvam Educational Trust from Thrissur. 'My Radio 90 FM' starts broadcast on Nov. 1, 2022 from Poothole, Kerala.

இந்திய அஞ்சல் துறை  வானொலி தொடர்பாக  நிறைய சிறப்பு அஞ்சல் உறைகளை  வெளியிட்டுள்ளது, ஆனால் சமுதாய  வானொலிக்காக, முதல் சிறப்பு அஞ்சல் உறையை MY RADIO 90 FMக்காக வெளியிட்டது. இது திருச்சூரில் இருந்து சிநேகபூர்வம் கல்வி அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. 'மை ரேடியோ 90 எஃப்எம்' நவம்பர் 1, 2022 அன்று கேரளாவின் பூத்தோலில் இருந்து ஒலிபரப்பைத் தொடங்கியது.

(Credits to  @writingfromthewonderland )

Thursday, November 03, 2022

மோர்ஸ் கீ ஸ்டாம்ப் | Stamp on Morse Key


கடந்த இரண்டு மாதங்களாக, இந்த அஞ்சல் தலை ஆஸ்திரேலியாவில் வெளியானதில் இருந்து வாங்க வேண்டும் என இருந்தேன். ஆனால், ஒரு அஞ்சல் தலையை வாங்க நாம் ரூ.1200 செலவு செய்ய வேண்டியதாக இருந்தது. அஞ்சல் தலையின் விலை என்னவோ ரூ.60 தான், ஆனால் அஞ்சல் செலவும், கஸ்டம்ஸ் டூட்டியும் விலையை எகிரச் செய்கிறது. எதற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டு இருந்தேன். 
ஆனால் ஆச்சர்யம் பாருங்கள் போஸ்ட்கிராசிங் ஊடாக ஆஸ்திரேலியாவில் இருந்து சகோதரி  கேத்தரின், நம் ஆர்வத்தினை அறிந்து, நாம் கேட்காமலேயே வாங்கி அனுப்பிவிட்டார்.

மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு தேவையான ஒன்று, சரியான நேரத்தில் உங்களை வந்தடைந்தே தீரும். தேவையற்றது, யார் தடுத்தாலும்  விலகியேத் தீரும். யாரும், எதையும் நமக்கு கிடைக்க வேண்டிய ஒன்றைத்  தடுக்கவியலாது. கிடைக்க வேண்டிய நேரத்தில், கிடைத்தேத் தீரும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். 

A few postcards will surprise us. That kind of thing is this Maximum card from Australia. Thank you Katherine for this lovely Morse Key stamp and postcard.


Tuesday, September 13, 2022

FOX HUNTING


 

Transmitter hunting (also known as T-hunting, fox hunting, bunny hunting, and bunny chasing), is an activity wherein participants use radio direction finding techniques to locate one or more radio transmitters hidden within a designated search area. This activity is most popular among amateur radio enthusiasts, and one organized sport variation is known as amateur radio direction finding.

நரி வேட்டை என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வரும் அக்டோபர் 2, 2022 அன்று இந்த நரி வேட்டை உடுமலைப் பேட்டையில் நடைபெற உள்ளது. உடுமலைப் பேட்டையில் எங்கே நரிகள் உள்ளது? என்று ஆச்சரியப்பட வேண்டாம். நரி வேட்டைக்கும் வானொலிக்கும் ஒரு தொடர்புள்ளது. இங்கு நரி என்பது வானொலி ஒலிபரப்பிகளைக் (டிரான்ஸ்மிட்டர்). குறிக்கும். ஹாம் வானொலியில் இது ஒரு வகையான விளையாட்டு ஆகும்.

டிரான்ஸ்மிட்டர் வேட்டை (டி-வேட்டை, என்றும் அறியப்படுகிறது), இதில் பங்கேற்பாளர்கள் ரேடியோ திசைக் கண்டறியும் ஆன்டனாக்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்டத் பகுதியில் மறைந்திருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களைக் கண்டறியும் ஒரு செயலாகும். இந்த செயல்பாடு ஹாம் (அமெச்சூர்) வானொலி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானதாகக் உள்ளது. இது தான் வரும் அக்டோபர் 2, 2022 அன்று உடுமலை அமேச்சூர் கிளப்பால் நடத்தப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு 99655 61041.

Thursday, September 08, 2022

ராணி இரண்டாம் எலிசபெத்: ரேடியோ எச்சரிக்கை ஒலிபரப்பு ‘(Radio Alert Transmission – RATS)’


ரேடியோ அலர்ட் முதல் ஆபரேஷன் லண்டன் பாலம் வரை, ராணி இரண்டாம் எலிசபெத் இறப்பும் வானொலியும்

'ஆபரேஷன் லண்டன் பாலம்'

 'ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ்' என்ற மாபெரும் நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் பத்திரிகைகளுக்கு கசிந்தது. ராணி இறந்த சில மணி நேரங்களில் என்ன நடக்கும் என்பதை இது விவரிக்கிறது. இந்த "ஆவணங்கள்" இங்கிலாந்தின் பொலிட்டிகோ என்ற செய்தி நிறுவனத்திற்கு முதலில் கசிந்தன, இதனை கேள்விக்குரிய நாள், அதாவது  "டி-டே" என்றும் அழைக்கப்படுகிறது.

அவரது இறுதிச் சடங்கிற்கு முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பயணக் குழப்பம் ஏற்படுவதை தவிற்கவும் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நூறாயிரக்கணக்கான மக்கள் தலைநகருக்குச் செல்வதால், லண்டனில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இறுதிச் சடங்கின் நாள் தேசிய துக்க நாளாக இருக்கும். முன்னதாக ராணியின் மரணச் செய்தியை அதிகாரிகள் தெரிவித்த பிறகு, ரேடியோ எச்சரிக்கை ஒலிபரப்பு '(Radio Alert Transmission – RATS)' மூலம் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டது.

ராணி இறப்பினை ஒட்டி சிறப்பு ஒலிபரப்பிற்கு பிபிசி ஏற்பாடு செய்துள்ளது. சிற்றலை வானொலி ஒலிபரப்பினை 15620, 15400, 12065, 11805, 11685, 7325, 6155, 5945 மற்றும் மத்திய அலை 1413 கி.ஹெ கேட்கலாம். இணையத்தில் https://www.bbc.co.uk/sounds நேரலையில் கேட்கலாம்.





Sunday, July 31, 2022

செஸ் ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி அஞ்சல் தலை

44th FIDE Chess Olympiad Chennai 2022


Inline image

Inline image



அஞ்சல் தலை சேகரிப்பு என்பது ஏதோ குழந்தைகள் மட்டுமே சேகரிப்பது என்று ஒரு பொது புத்தியுள்ளது.  அது அப்படியானதல்ல. இதில் கிடைக்கும் பொது அறிவு அளப்பரிய ஒன்று. 


மாமல்லபுரத்தில் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்ற சதுரங்கப் போட்டியை மையப்படுத்தி இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள இந்த முதல் நாள் கடித உறை (first day cover), சிறப்பு அஞ்சல் தலை, முதல் நாள் முத்திரை ஆகியவை தற்பொழுது அண்ணா சாலை, அஞ்சல் தலை சேகரிப்பு மையத்தில் (Philatelly Beurue) ரூ.5க்கு கிடைக்கிறது (அஞ்சல் தலை மட்டும்).


சென்னையில் பிரமாண்டமாக நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்பதால், இந்த அஞ்சல் உறை மற்றும் அஞ்சல் தலையை மறவாமல் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நாளை இதன் மதிப்பு நீங்களே எதிர்பாராத வகையில் மாறும் என்பதில் ஐயமில்லை.


#chess #stamp #olympiad #philatelist #fdc #indiapost #firstdaycover #cancellation